ஸ்ரீநகர்: நாடாளுமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் ஸக்ஸேனா தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீநகர் சென்றடைந்தனர்.
இரண்டு நாள் பயணமாகச் செல்லும் அந்தக் குழுவானது, மாநில நிர்வாக அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் ஸ்ரீநகரில் திங்கள்கிழமையும், ஜம்முவில் செவ்வாய்க்கிழமையும் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது.
ஸ்ரீநகர் கூட்டத்தில் ஏழு தேசிய கட்சிகள் மற்றும் மூன்று பிராந்திய கட்சி பிரதிநிதிகளுடன் ஆணையம் திங்களன்று ஆலோசனை நடத்துகிறது.
அதேபோல புல்வாமா தாக்குதலையடுத்து மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் மற்றும் லடாக் பிராந்தியத்தின் இரண்டு மாவட்டங்களின் நிலைகுறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பேரவைத் தேர்தலையும் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால், அதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
செவ்வாயன்று தில்லிக்கு திரும்புவதற்கு முன்னால் தேர்தல் ஆணையக் குழுவினர் ஜம்முவில் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


