மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பிகாரில் 153 குழந்தைகள் மரணம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிகாரில் மூளை அழற்சி நோயால் 153 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2019, 5:46 am


புது தில்லி: பிகாரில் மூளை அழற்சி நோயால் 153 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் குறித்து மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து விரிவான பதில் மனுவை இன்னும் 7 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

பிகார் மாநிலத்தில் மூளை அழற்சி நோயால் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை 153 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு உள்ள இடங்களில் நீரில் கரைத்து குடிப்பதற்காக இலவசமாக குளுக்கோஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் செலவு, தனியார் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிப்பது என அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிகாரில் குழந்தைகள் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பதில் மனு கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.