ஹைதராபாத்: கொள்ளளவின் அடைப்படையில் உலக அளவில் பெரியதாகக் கருதபப்டும் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார்.
தெலங்கானவில் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் பிரானாஹிட்டா ஆற்றுடன், கோதாவரி ஆறு சங்கமிக்கும் இடத்தில் ரூ.80,500 கோடி மதிப்பில் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியை பெறுவதோடு, தெலங்கானாவில் உள்ள 70 சதவீத மாவட்டங்களுக்கான வேளாண்மை, குடிநீர் மற்றும் ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என தெலங்கானா அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காளேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சந்திரசேகர ராவின் அழைப்பை ஏற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மகாராஷ்டிரா முதலவர் தேவேந்திர பட்னவீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு ஆளுநர் ஈ.எஸ் எல். நரசிம்மன் தலைமை தாங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


