பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு குறைவு (ஹைபோகிளைசீமியா) காரணமாக பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 136-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பிகார் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த 1-ஆம் தேதி முதல் பிகாரின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 600 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றர். இவர்களில் 136 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முதலில், குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறி காணப்பட்டதால், அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து குழந்தைகள் இறந்து கொண்டிருந்தனர். பின்னர்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததன் காரணமாக அவர்கள் இறந்தது தெரிய வந்தது.
உயிரிழந்த அனைவரும் 10 வயதுக்குள்பட்டவர்கள். கடந்த ஆண்டில் இந்த நோய்க்கு 4 குழந்தைகள்தான் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 16 மாவட்டங்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முசாஃபர்பூர் மருத்துவமனையில் தான் அதிகபட்ச உயிரிப்புகள் நேரிட்டுள்ளன. இங்கு மட்டும் 117 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
முதல்வர் உத்தரவு..: இந்த நோய் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், குழந்தைகளை பசியுடன் தூங்க வைக்க வேண்டாம் என்று பெற்றோர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நார்வே மருத்துவர்கள் குழு ஆய்வு..: குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு நார்வே நாட்டிலிருந்து நிபுணர்கள் குழு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மத்திய அரசின் சிறப்பு மருத்துவர்கள் குழு பார்வையிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


