மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மக்களவை சபாநாயகராகிறார் பாஜக எம்பி ஓம் பிர்லா!

மக்களவையின் புதிய சபாநாயகர் பதவியில் இரண்டு முறை பாஜக எம்.பி.யாக இருந்த ஓம் பிர்லாவை நியமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :18 ஜூன் 2019, 9:43 am


மக்களவையின் புதிய சபாநாயகர் பதவியில் இரண்டு முறை பாஜக எம்.பி.யாக இருந்த ஓம் பிர்லாவை நியமிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை தகவல்கள் அனைத்தும் உண்மையாகி, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்பி ஓம் பிர்லாவின் பெயரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி பரிந்துரைக்குமானால், எவ்வித தடையும் இன்றி அவர் பெரும்பான்மை பலத்தோடு மக்களவையின் சபாநாயகர் பதவியில் அமர்வார்.

மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் எனும் நிலையில், காங்கிரஸ் கட்சி தரப்பில் வேட்பாளர் யாரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா (57) மூன்று முறை எம்எல்ஏவாகவும் இரண்டுமுறை எம்.பியாகவும் தேர்வானவர். 

பொதுவாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு மூத்த உறுப்பினர்களே தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், முதல் முறை மற்றும் இரண்டாம் முறை மக்களவை உறுப்பினர்களானவர்களும் கூட இப்பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

மனோகர் ஜோஷி 2002ம் ஆண்டு மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட போது, அவர் அப்போது முதல் முறையாக எம்பியாக தேர்வானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.