மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர் இறந்துபோன தனது மகளின் பிணத்தோடு ஒரு மாத காலம் தங்கியிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் ஹயாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலாவர் சித்திக்கி. ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக காவல்துறையில் அக்கமபக்கத்தினர் புகார் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரது எதிர்ப்பையும் மீறி வீட்டினில் நுழைந்து சோதனை நடத்திய போதுதான், திலாவர் இறந்துபோன தனது மகளின் பிணத்தோடு ஒரு மாத காலம் அந்த வீட்டில் தங்கியிருந்த சம்பவம் தெரிய வந்தது. அவருடன் அவரது மனைவியும் இருந்துள்ளார். பொதுவாக அவர்கள் யாருடனும் பேசாமல் தனியாகவே இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஸ்வரூப் பாண்டே கூறியதாவது:
கைப்பற்றப்பட்ட திலாவரின் மகளது சடலமானது பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குமுன்னரே கூட பக்கத்து வீட்டினர் புகாரின் பேரில் காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் பிரச்சினை இல்லை என்று கூறி காவலர்களை அவர் திருப்பி அனுப்பி விட்டார்.
திலாவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல காணப்படுகிறார். எனது மகள் இறக்கவில்லை; அவள் உயிரோடுஇருக்கிறாள்; உறங்கிக் கொண்டிருக்கிறாள்" என்றே கூறி வருகிறார்.
பிணக்கூறாய்வின் முடிவில் சாவுக்கான காரணம் என்னால் என்பது தெரிய வரும். அதற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


