புது தில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடி அவசரம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவரை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது.
எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஒரு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்; அதுவரை, அலோக் வர்மா கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பிரதமர் மோடி அவசரம் காட்டுவது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடபாக வியாழன் அன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஏன் பிரதமர் அத்தனை அவசரமாக சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்ய துடிக்கிறார்? ஏன் அவர் சிபிஐ இயக்குநரை தேர்வுக் குழு முன் ஆஜராகி தனது தரப்பைச் சொல்ல அனுமதிக்கக் கூடாது? பதில்: ரஃபேல்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் அப்பொறுப்பில் நியமித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராகுல், 'ரஃபேலிடம் இருந்து பிரதமர் மோடியை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


