மீரட்: ஐஎஸ்ஐஎஸ் மாதிரி பயங்கரவாத அமைப்பினர் கைது விவகாரத்தில், ஆயுதங்களை அளித்த முக்கிய குற்றவாளியான 21 வயது இளைஞர் கைது செய்யயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பிறகு செய்யப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ரகசிய விசாரணைகளின் அடிப்படையின் அந்த அமைப்பின் பெயர் ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்பதும், இந்த அமைப்பானது வட இந்தியாவில் குறிப்பாக தில்லியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த பயங்கரவாத குழு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளது என்பதும், இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குழு தொடர்பாக கிடைத்த தகவலை கொண்டு தேசிய புலனாய்வு ஆணையம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் கடந்த வாரம் புதனன்று (26.12.18) அதிரடி சோதனையை நடத்தியது.
தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் இந்த குழுவின் தலைவர் உட்பட குழுவுடன் தொடர்புடைய 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அசிம் அருண் கூறியுள்ளார். மேலும் ஐந்து பேர் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனைகள் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் மாதிரி பயங்கரவாத அமைப்பினர் கைது விவகாரத்தில், ஆயுதங்களை அளித்த முக்கிய குற்றவாளியான 21 வயது இளைஞர் கைது செய்யயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த நயீம் என்ற 21 வயது வாலிபர், ஆயுதங்களை சப்ளை செய்த குற்றச்சாட்டின் பேரில் வியாழன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


