பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மிக் - 21 விமானத்தில் சென்று மாயமான இந்திய விமானி அபிநந்தன் யார்?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமாகியுள்ளார்.

News image
Updated On :27 பிப்ரவரி 2019, 2:32 pm


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமாகியுள்ளார்.

இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சில விடியோக்களையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறியுள்ளது.

மாயமான இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சிம்ஹகுட்டி வர்தமானின் மகனாவார். சிம்ஹகுட்டி வர்தமான் பரம் விஷிஷ்ட் சேவா விருது பெற்றவராவார்.

கமாண்டர் அபிநந்தன்,பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருப்பணமூர் கிராமம் ஆகும். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது இவரது தந்தை சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்துள்ள சேலையூரில் வசித்து வருவதாக உறவினர் தெரிவித்தார். 

ஊடகங்களில் பரவிய புகைப்படத்தின் மூலமாகத்தான் நாங்கள் அபிநந்தனை அடையாளம் கண்டுகொண்டோம் என்று அவரது உறவினர் மேலும் கூறினார். 

பாகிஸ்தான் வசம் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இந்திய விமானி அபிநந்தனை நினைத்து இந்திய மக்கள் பலரும் தங்கள் வீட்டு மகன் சிறைபிடிக்கப்பட்டால் எந்தவிதமான மன வருத்தம் அடைவார்களோ அந்த உணர்வை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது கிடைத்திருக்கும் ஒரு தகவலில், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில், படத்தின் கதாநாயகன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்படுவது போன்ற காட்சிகளை எடுக்க, இயக்குநர் மணிரத்னம், ராணுவம் தொடர்பான விஷயங்கள் குறித்து அபிநந்தனின் தந்தையிடம் ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.