லக்னௌ: 2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால், வியாழனன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
ரூ. 4.79 லட்சம் கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டானது விவசாயிகள் மேம்பாடு, சுகாதாரத் துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை மேம்பாட்டுக்கென ரூ. 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பசுப்பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 600 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில கலால் துறை சார்பாக மாநிலம் முழுவதும் கால்நடை கொட்டகை கள் கட்டுவதற்குகாக சிறப்பு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 165 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிராமப்புற பகுதிகளில் கோசாலைகளை உருவாக்கி பராமரிப்பதற்காக ரூ. 247.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க "கன்ஹா கோசாலைகாலை" உருவாக்குவதற்காக மற்றொரு 200 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளை பராமரிக்கும் இல்லங்களை உருவாக்க ரூ. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


