அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இலங்கையில் கனமழை: 2 பேர் பலி, 65 ஆயிரம் பேர் பாதிப்பு

இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை..

News image
Updated On :23 டிசம்பர் 2019, 12:24 pm

கொழும்பு: இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வரும் நிலையில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்.  65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 மாவட்டங்களில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. 

வட மத்தியப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேரில் சென்று பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க 25 மீட்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் கிழக்கு, தெற்கு மாவட்டங்களில் மேலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.