அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

அஸ்ஸாமில் பாஜக அமைதிப் பேரணி

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அஸாமின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும்

News image
Updated On :21 டிசம்பர் 2019, 8:13 am

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும்,  முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில், வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணியை  பாஜக நடத்தியது. 

தலைநகர் திஸ்பூரிலிருந்து 70 கி.மீ தூரத்திலுள்ள நல்பரியில் நடந்த பிரமாண்டமான பேரணியில், சோனோவால் மற்றும் அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ) நல்பாரி நகரில் "பஜ்ரானினாட்" என்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தியது.

வழக்குரைஞர்கள்,  அஸ்ஸாமின் "மொழி மற்றும் கலாசாரத்திற்கு" விரோதமானது என்ற கோஷத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். சி.ஜே.எம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி இந்த பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் இந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.