நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்ததற்காக பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) ஆதரிக்காது என்று கூறியுள்ளது.
மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் இரண்டு உறுப்பினர்களும் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள முஸ்லீம் சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், துணை முதல்வருமான அம்ஜத் பாஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, முஸ்லீம் சமூகத்தின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு மசோதாவையும் கட்சி எதிர்க்கும். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்கள் மீது அனுதாபம் காட்டுவதாகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க கட்சி முயற்சி எடுக்கும். தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) கட்சி ஆதரிக்காது' என்று கூறியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


