அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நீதிமன்ற அறைக்குள்ளே குற்றவாளி கொலை; 18 போலீஸார் இடைநீக்கம்!

உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, 18 போலீஸாரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :18 டிசம்பர் 2019, 7:30 am

உத்தரப் பிரதேசத்தில் நீதிமன்ற அறைக்குள் வைத்து குற்றவாளி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, 18 போலீஸாரை இடைநீக்கம் செய்து அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஒரு கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, உள்ளே புகுந்த மூவர், நீதிமன்றத்தில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து குற்றவாளிகளை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். 

இதில் குற்றவாளிகளில் ஒருவரான அன்சாரி  சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி படுகாயம் அடைந்தார். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் மூவருமே பழிவாங்கும் நோக்கில் குற்றவாளிகளை கொல்ல முயற்சித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளி கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வழக்குடன் தொடர்புடைய 18 காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளதாக உத்தரப்பிரதேச காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.