ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: உ.பி. போலீஸாருக்கு மாயாவதி அறிவுறுத்தல்

ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து உத்தரப்பிரதேச போலீஸார் உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 டிசம்பர் 2019, 6:31 am

ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து உத்தரப்பிரதேச போலீஸார் உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் போலீஸாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

Story image

குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மக்கள், முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இதுகுறித்து கூறுகையில், 'ஹைதராபாத் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதுபோன்ற சம்பவம் ஒரு மாவட்டத்தில் மட்டுமல்ல; நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைவரும் பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர். 

இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைதராபாத் போலீஸாரிடம் இருந்து உத்தரப்பிரதேச மாநில போலீஸார் உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உத்தரப்பிரதேச மற்றும் தில்லி போலீஸார் பெண்களுக்கு எதிரான சூழ்நிலையை மாற்ற வேண்டும்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.