உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை குறைக்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 25வது ஆளுநராக ஆனந்தி பென் படேல் கடந்த ஜூலை 29ம் தேதி பதவியேற்றார். இவர், முன்னதாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்துள்ளார். அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தொடர்ந்து, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ள ஆனந்தி பென் படேல், தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை குறைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பாதுகாப்பு வீரர்களில் 50 பேரை திரும்பப் பெறுமாறு அவர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். தனக்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையில்லை என்றும் பாதுகாப்பு வீரர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோன்று அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், தனக்கு நியமிக்கப்படவிருந்த கூடுதல் பாதுகாப்பு வீரர்களை திரும்பப்பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!
கல்வராயன் மலையில் முதிய தம்பதி கொலை: பேரன் தலைமறைவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


