சுதந்திர தின விழாவையொட்டி, லடாக் தொகுதி பாஜக எம்.பி அங்குள்ள மக்களுடன் இணைந்து நடனமாடிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் விவாதத்தின் போது, மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜாம்யாங் சேரிங் நமங்யால் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் பேசியது குறித்து பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று ஜம்மு காஷ்மீரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் கொடியேற்றினார். அதேபோன்று லடாக்கிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜாம்யாங் சேரிங் நமங்யால் பரம்பரிய உடை அணிந்து, மக்களுடன் இணைந்து நடனம் ஆடினார். லடாக் மக்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், மக்களுடன் இணைந்து பாரம்பரிய மேளத்தை இசைத்தார்.
அவரது விடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


