ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.
அதாவது ஸ்ரீநகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே சமயம், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்த நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்படும் உடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், கர்ப்பிணிகள் பலரும், பிரசவ காலத்துக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது. பிரசவ வலி வந்ததும் மருத்துவமனைக்கு வர முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி மருத்துவமனைக்கு முன்கூட்டியே வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் இருக்கும் நோயாளி ஒருவர் கூறுகையில், இந்த மருத்துவமனைக்கு வருவதற்குள் 10 இடங்களில் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். நல்லவேளை மருத்துவமனைக்கு வந்துவிட்டோம் என்று கூறினார்.
அதே சமயம், பல்வேறு தடைகள் காரணமாக நோய் தாக்கியதுமே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படாமல், உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் உடல்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில், மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நிலைதான் பரிதாபமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!
கல்வராயன் மலையில் முதிய தம்பதி கொலை: பேரன் தலைமறைவு

விழுப்புரத்தில் இன்று திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


