ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

எனக்கு மோடியின் ஜாதி கூட தெரியாது: பிரியங்கா வதேரா

எனக்கு மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது என்று உ.பி. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா கூறியுள்ளார். 

News image
Updated On :28 ஏப்ரல் 2019, 12:27 pm

எனக்கு மோடியின் ஜாதி எதுவென்றே தெரியாது என்று உ.பி. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா கூறியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவரும், சகோதரருமான ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நமது நாட்டின் பிரச்னைகள் மிகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மிகவும் பின்தங்கியுள்ளது. தேசியவாதம் என்பது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு மக்களின் பிரச்னைகளை என்றும் கேட்டதில்லை. 

அதையும் மீறி மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து போராடினால், அவர்களை இந்த அரசு ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே இது ஜனநாகமும் கிடையாது. இதில் தேசியவாதமும் இல்லை.

பணம், புடவை மற்றும் காலணி உள்ளிட்டவைகளை பாஜக வேண்டுமென்றே ஊடகத்தின் முன் மக்களுக்கு வழங்கி தேர்தலை சந்திக்கிறது. நான் இங்கு 12 வயதிலிருந்து வருகிறேன். எங்கள் தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலி மக்கள் பெருமைக்குரியவர்களாகவே இருந்து வருகின்றனர். எனவே அமேதி தொகுதி மக்கள் என்றும், யாரிடமும் பிச்சை கேட்டது இல்லை. 

காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் மக்களின் வளர்ச்சி தொடர்பாக மட்டுமே எதிர்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி குறித்து எந்தவொரு தனிப்பட்ட விமர்சனங்களும் செய்ததில்லை. எனக்கு இன்று வரை பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி எதுவென்று கூட தெரியாது என்று தெரிவித்தார். 

முன்னதாக, அமேதி தொகுதியில் காலணி இல்லாத மக்களுக்கு அதனை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.