கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கௌதம் கம்பீர் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிஷி தில்லியில் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கௌதம் கம்பீர் களமிறங்குகிறார். இதனிடையே அவரது வேட்புமனுவில் பல தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் இரு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாக அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், கௌதம் கம்பீர் மீது தில்லி போலீஸார், சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு தில்லி தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


