குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த கிர் வனப்பகுதி அமைந்துள்ள இடத்தில் ஒரேயொரு வாக்காளருக்காக பிரத்தியேகமாக ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வாக்காளரும் கடமை தவறாமல் அங்கு தனது வாக்கை செவ்வாய்கிழமை பதிவு செய்தார். அவரது பெயர் பரத்தாஸ் பாபூ ஆகும்.

இதுகுறித்து பரத்தாஸ் பாபு கூறுகையில்,
எனது ஒரு வாக்குக்காக இங்கு ஒரு வாக்குச்சாவடி மையத்தை அரசு அமைத்துள்ளது. என்னுடைய ஒருவருக்காக அரசு இந்த செலவை செய்துள்ளது. நானும் தவறாமல் வாக்களித்துவிட்டேன். அதனால் எனது வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இதேபோன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அனைவரும் தயவு செய்து தவறாமல் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றம் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


