ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மழை குறைந்ததன் எதிரொலியாக பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சல் சரிந்தது

கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.

News image
Updated On :20 ஏப்ரல் 2019, 10:38 am


கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.

கோடை வெயில் தொடங்கியதும் சந்தைக்கு வரத் தொடங்கும் மாம்பழ வரத்து தற்போது குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் விளையும் மாம்பழங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் பங்கனப்பள்ளி மாம்பழங்களை அவ்வளவு அதிகமாகப் பார்க்க முடியவில்லை. 

2500 ஹெக்டேரில் விளைவிக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம் இந்த முறை ஆந்திராவில் வெறும் 600 ஹெக்டேரில் மட்டுமே விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் தேவை உலக நாடுகளிலும் அதிகமாக இருப்பதால் இந்தியாவின் இதன் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இன்மை, இந்த ஆண்டு பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சலை சுருக்கிவிட்டுச் சென்றுள்ளது. இதனால் மாம்பழ பிரியர்கள் அதிக விலை கொடுத்துத்தான் பங்கனப்பள்ளி மாம்பழத்தை வாங்க வேண்டியது இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.