ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தேர்தல் பணியில் ராணுவம்: குடியரசுத் தலைவருக்கு கடிதம் வந்தது செய்தியல்ல புரளி!

இந்திய ராணுவத்தை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் செய்தியல்ல. வெறும் புரளி.

News image
Updated On :12 ஏப்ரல் 2019, 12:32 pm


புது தில்லி: இந்திய ராணுவத்தை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் செய்தியல்ல. வெறும் புரளி.

குடியரசுத் தலைவர் மாளிகையும் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், மக்களவைத் தேர்தல் பணிக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படையை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபோன்ற எந்தவொரு கடிதமும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதே போல, ராணுவ முன்னாள் அதிகாரிகளும், இதுபோன்றதொரு எந்தக் கடிதத்தையும் எங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் 8 பேர் கையெழுத்திட்டு குடியரசுத்  தலைவருக்கு அனுப்பியதாக ஒரு கடிதம் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து இரு தரப்பில் இருந்தும் மறுப்பு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும், இந்த கடிதம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற எந்தவொரு கடிதமும் எழுதப்படவில்லை. அப்படி ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் எந்த விஷயமும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.