ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மேக்கப்பால் தான் மோடி ஜொலிக்கிறார்: கர்நாடக முதல்வர் குமாரசாமி

அவ்வப்போது ஒப்பனை செய்துகொள்வதால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஜொலிப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். 

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 1:45 pm

அவ்வப்போது ஒப்பனை செய்துகொள்வதால் தான் பிரதமர் நரேந்திர மோடி ஜொலிப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் நாளொன்றுக்கு 3 முதல் 4 தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், அவரது முகம் எப்போதும் பிரகாசமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், நாம் அனைவரும் காலை குளித்த பிறகு மறுநாள் தான் முகம் கழுவுவோம். அதனால் தான் நமது முகம் கேமரா முன்பு நன்றாக இருப்பதில்லை. 

ஆனால், பிரதமர் மோடி காலையிலேயே ஒப்பனை செய்துகொண்டு கேமரா முன்பு அமர்ந்துகொள்வார். இதனால் அவரது முகம் பொலிவுடன் இருப்பதால், கேமராக்களும், ஊடகங்களும் அவரை மட்டுமே படம்பிடிக்கின்றன.

கட்சியினர் யாரும் பாஜக-வுக்காக வாக்கு சேகரிப்பதில்லை. அவர்களும் மோடிக்காக மட்டுமே வாக்கு சேகரிக்கின்றனர். இதனால் அந்த கட்சியின் ஜனநாயகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் மோடி, கர்நாடகத்துக்காக எந்த நன்மையும் செய்தது கிடையாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.