உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்தனர்.
அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று காலை குடும்பத்தினருடன் வந்தார் ராகுல் காந்தி. பிறகு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த ராகுல், மதியம் 1 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.
ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது.
அமேதியில் ஆறாவது கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - கடகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


