ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சத்தீஸ்கரில் 34 நக்ஸலைட்டுகள் எஸ்பி மார்வி  முன்பு சரண்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 34 நக்ஸலைட்டுகள் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 3:52 am


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 34 நக்ஸலைட்டுகள் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.

11 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தர் மக்களவைத் தொகுதி, நக்ஸல் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக இருப்பதால், தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு படையினர் அந்த பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் சில நக்ஸலைட்டுகளின் ஒரு பிரிவினர் சரணடைய தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு புனர்வாழ்வு தரும்படியும் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ் மார்வியிடம் கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில் சில நக்ஸலைட்டுகள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில நக்ஸலைட்டுகளின் தலைக்கு போலீஸார் சன்மானம் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை (ஏப் 8) 3 பெண் நக்ஸல்கள் உள்பட 34 நக்ஸல்கள் காவல் கண்காணிப்பாளர் பி.எஸ் மார்வி முன்பு சரணடைந்தனர். 

மக்களவைத் தேர்தல் நேரத்தில் நக்ஸல்கள் சரணடைந்திருப்பது மனநிறைவைத் தருவதாக எஸ்பி பி.எஸ் மார்வி கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 26 ஆம் தேதி சுக்மா மாவட்டத்தின் கர்கான்குடா கிராமத்துக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் நக்ஸல்களும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நந்த மோதலில், நக்ஸல்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மறைந்திருந்த இடத்தில் இருந்து இன்சாஸ் ரக துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

Chhattisgarh: 34 naxals surrendered before the police in Sukma yesterday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.