ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளன: அமித் ஷா

காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியச் செயலர் அமித் ஷா கூறியுள்ளார். 

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 12:34 pm


காங்கிரஸ் மற்றும் ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசியச் செயலர் அமித் ஷா கூறியுள்ளார். 

இந்தியப் பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தைக் கொண்டு வந்து அதற்காக பணியாற்றிக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாட்டை உடைப்போம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வறுமையை ஒழிப்போம் என்று மோடி குரல் கொடுத்த போது மோடியை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கூறினர். இதன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடிஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது புரிகிறது என்று கூறினார்.

மேலும், எதிர்க்கட்சியினருக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. ஒடிசாவை ஆளும் நவீன் பட்நாயக், தனது தவறான ஆளுமையால், மாநிலத்தை ஆளும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.