ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பேர் பயணிகளுடன் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அப்போது சில நிமிடங்களில் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலைவலி ஏற்பட்டதோடு மூக்கு மற்றும் காது வழியாக ரத்தமும் கசிந்தது. இதனால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணிகள் அனைவரும் உடனடியாக மும்பை விமான நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் இயக்கியதே இத்தகைய பாதிப்புக்கு காரணம்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இவ்விவரம் அறியப்பட்டவுடன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் விமானப் போக்குவரத்து விபத்து தடுப்புக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்பு தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அறிக்கை அடுத்த 30 நாட்களுக்குள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. இதில் நடைபெற்ற தவறு கண்டறியப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


