பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு  

நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 செப்டம்பர் 2018, 12:07 pm

புது தில்லி: நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாஜக ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. 

அதன் தொடர்ச்சியாக இரு மாநிலங்களிலும் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் உத்தரவிடுமாறும், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு ஒப்புகைச் சீட்டில் தெரிய வரும் எண்ணிக்கைக்கும் இடையே சரிபார்த்தல் நடைபெறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான கமல்நாத் கடந்த மாதம் 10-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு மீது விரிவான பதில்மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் 101 பக்க பதில்மனு ஒன்றினை செவ்வாயன்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது        

கமல்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளதை நியாயப்படுத்தும் வகையில் எந்த விதமான வலுவான ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 

அத்துடன் நாங்கள் எந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் கூற முடியாது  அதற்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து எங்களது பணிகளில் தலையிட முடியாது. 

இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.