அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

உடல்நலக் குறைவால் பதவி விலகுகிறாரா மனோகர் பாரிக்கர்? கோவாவில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில் இன்று பாஜக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:46 pm

IANS


பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில் இன்று பாஜக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.

கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பாஜக மூத்தத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

கணையப் புற்றுநோய் பாதித்து  அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதன்படி, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

உடல்நிலை காரணமாக நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாமல் இருப்பதால், முதல்வர் பதவியில் இருந்து விலக மனோகர் பாரிக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.