புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ரெய்டு காரணமாக தற்கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் வேட்பாளர் கைது

பணம் வைத்திருந்தது தொடர்பாக போலீஸார் சோதனை நடத்தியதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார்.

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:34 am

பணம் வைத்திருந்தது தொடர்பாக போலீஸார் சோதனை நடத்தியதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார்.

தெலங்கானாவில் உள்ள காஜ்வெல் தொகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் வேட்பாளர் ஒன்டேரு பிரதாப் ரெட்டி. இவர் வீட்டில் அதிகளவில் பணம் வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அப்பகுதி போலீஸார் சோதனையில் ஈடுபட முயன்றனர்.

இந்நிலையில், கோம்பள்ளியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராதப் ரெட்டி, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். மேலும் அவரது ஆதரவாளர்கள் பிரதாப் ரெட்டி வீட்டின் முன்பு போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறி நடந்துகொண்டதாகக் கூறி பிரதாப் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.