புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் எதிரொலி: ஒடிஷாவில் மதுக்கடைகளின் விற்பனை நேரம் அதிகரிப்பு 

ஒடிஷா தலைநகர் புபனேஷ்வரில் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன்   எதிரொலியாக, அங்கு மதுக்கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2018, 11:46 am

புபனேஷ்வர்: ஒடிஷா தலைநகர் புபனேஷ்வரில் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன்   எதிரொலியாக, அங்கு மதுக்கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

14-ஆவது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புபனேஷ்வரில், நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளன. இதற்காக மாநிலஅரசின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன 

இந்நிலையில் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன்   எதிரொலியாக, புபனேஷ்வரில் மதுக்கடைகள் மற்றும் பார்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற உள்ளதன் காரணமாக மதுக்கடைகளின் வேலை நேரத்தை அதிகரிக்கலாம்  என்ற விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையினை ஏற்று, வேலை நேரமானது அதிகாலை 01.30 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதுதொடர்பாக தகவல் தெரிவித்த கலால் வரித்துறை அதிகாரியொருவர், ஒடிஷாவில் தேசிய அல்லது சர்வதேச அளவிலான நிகழ்வுகள் நடைபெறுவதாக இருந்தால், ஒரு அறிவிப்பு மூலம் மதுக்கடைகளின் வேலை நேரத்தை மாநில அரசு அதிகரிக்கலாம்  என்று தெரிவித்தனர். 

அதேநேரம் விருந்தினர்கள் மற்றும் வீரர்கள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதி அறைகளிலேயே மது அருந்த முடியும் என்பதால், இந்த நேர நீட்டிப்பு என்பது  தேவையில்லாத ஒன்று  என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.