புது தில்லி: அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில காவல்துறையில் டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஹரீஷ் மீனா. பின்னர் பாஜகவில் இணைந்த அவர், தவுஸா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸில் இணைந்துள்ளார்.
டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பாஜக எம்.பியான ஹரீஷ் மீனா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
தில்லியில் புதனன்று நடந்த இணைப்பு விழாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் முன்னிலையில், ஹரீஷ் மீனா காங்கிரசில் இணைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


