வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம் ஜாகூ அரிஜால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:12 pm

ANI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டம் ஜாகூ அரிஜால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

புட்காம் மாவட்டத்தின் ஜாகூ அரிஜால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை எச்சரித்தது. அதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ங4 மற்றும் அஓ 47 ரக துப்பாகிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உயிரிழந்த பயங்கரவாதிகள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.