புது தில்லி: சிறைகளில் இருக்கும் ஏழை விசாரணைக் கைதிகள் பெயிலில் வெளியே செல்லத் தேவையான வைப்புத் தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
ஏதேனும் சிறிய வழக்கில் சிக்கி விசாரணையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் பெயிலில் வெளியே செல்ல நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைத் தொகையை செலுத்த பணம் இல்லாத காரணத்தால், ஏராளமான விசாரணைக் கைதிகள் சிறையிலேயே காலம் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், சிறைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், கூட்ட நெரிசலைக் குறைக்க என்ன செய்வது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசித்தது.
இதில், உதித்ததுதான் இந்த திட்டம். இதன் முதற்கட்டமாக பல்வேறு சிறைகளில் இருக்கும் 11,916 பெண் விசாரணைக் கைதிகளின் சார்பில் பெயிலுக்கான பணத்தை மத்திய அரசே செலுத்தி அவர்களை பெயிலில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2015ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய சிறைகளில் சுமார் 3 லட்சம் விசாரணைக் கைதிகள் இருக்கின்றனர். இவர்களில் 62 ஆயிரம் பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநில அரசுகளிடம் யோசனை கேட்கப்பட்டதில், பல மாநிலங்கள் இத்திட்டத்துக்கு வரவேற்பு அளித்துள்ளன.
சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளை பெயிலில் வெளியே அனுப்ப முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு நிபந்தனை பணமாக ரூ.500 முதல் ரூ.5,000 வரை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


