மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரயில்வே டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி மொபைல் செயலியே சொல்லிவிடுமே!

காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.

News image
Updated On :29 மே 2018, 10:10 am


புது தில்லி: காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.

ஐஆர்சிடிசியின் மொபைல் ஆப்பில் இன்று முதல் இந்த புதிய சேவை இணைகிறது.

அதாவது, காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'வெயிட்லிஸ்ட் பிரிடிக்ஷன்' என்ற வாய்ப்பைக் கிளிக் செய்தால், அந்த டிக்கெட் கன்பார்ம் ஆக எத்தனை சதவீத வாய்ப்புகள் உள்ளது என்பதை கூறும்.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்தினால், காத்திருப்பு அல்லது ஆர்ஏசி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாமா? அல்லது வேறு ஏதேனும் மாற்று வழிகளை நாடலாமா என்பது குறித்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதனால், காத்திருப்புப் பட்டியலில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டு கால வரலாற்றை கவனமாக பார்த்து வந்தால், ஒரு காத்திருப்பு ரயில் டிக்கெட் உறுதியாகுமா என்பதை யார் ஒருவரும் கணித்து விடலாம். இந்த அடிப்படையில்தான் புதிய சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காத்திருப்பு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு டிக்கெட் கிடைக்காமல் ஏமாறுவோரின் எண்ணிக்கைக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே அதிகாரி கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.