சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகின. இதில் வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 85.32 சதவீதம் தேர்ச்சி பெற, மாணவிகளோ 88.67 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 4 மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். பிரகார் மிட்டல் - குர்கான், ரிம்ஸிம் அகர்வால் - பிஜ்நோர், நந்தினி - கார்க், ஷாம்லி மற்றும் ஸ்ரீலட்சுமி - கொச்சி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு அடுத்து 7 மாணவர்கள் 498 மதிப்பெண்களுடன் 2ம் இடத்திலும், 497 மதிப்பெண்களுடன் 14 மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்தனர்.
திருவனந்தபுரம் 99.60 சதவீத தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், சென்னை மண்டலம் 97.37 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், அஜ்மீர் 91.86 சதவீதத்துடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
10ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, மீண்டும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு, கடந்த கல்வியாண்டில் 16 லட்சம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


