கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விவிபேட் கருவிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடியூரப்பா புகார்

விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி வட்டத்தின் மனகுலி கிராமத்தில் 8 விவிபேட் கருவிகள் தேசிய நெடுஞ்சாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் கண்டுபிடிக்கப்பட்டன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்முறையாக மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கக்கூடிய விவிபேட் கருவியின் பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் தங்களின் வாக்குப்பதிவை உறுதி செய்துகொள்ள முடியும். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி வட்டத்தின் மனகுலி கிராமத்தில் 8 விவிபேட் கருவிகள் தேசிய நெடுஞ்சாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகையில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் வாக்குச் சீட்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாஜக தலைவர் எடியூரப்பா, தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விஜயபுரா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட 8 விவிபேட் கருவிகள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற செயல்கள் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் நடந்த உச்சகட்ட விதிமீறல் சம்பவங்களை எடுத்துக்காட்டுகிறது. 

இதுபோன்ற தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முன்பே இதுபோன்ற பல தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இருப்பினும் இதில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.