ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கிறார் குமாரசாமி
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இரவு 7:30-க்கு ஆளுநரை சந்திக்கிறார் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி.


கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு முன்பாக எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஆளுநரிடம் இருந்து அழைப்புக்காக காத்திருக்கிறார் குமாரசாமி.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக உரையாற்றிய எடியூரப்பா, தங்களிடம் 104 எம்எல்ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்று கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி பதவியேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நடாக சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 10 மணியளவில் கூடியது. இதில் வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர். பின்னர் மாலை 3:30-க்கு முதல்வர் எடியூரப்பா, உணர்ச்சிமிகு உரையாற்றினார்.
அப்போது பாஜக-வுக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகக் கூறி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.
இந்நிலையில், மஜத கட்சித் தலைவர் குமாரசாமி, ஆளுநர் வஜுபாய் வாலாவை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...