டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்தது ஏன்? பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா கேள்வி

கர்நாடகாவில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சியமைத்தது ஏன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:04 pm

ENS


பாட்னா: கர்நாடகாவில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சியமைத்தது ஏன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில், பெரும்பான்மை பலம் இல்லாத பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் விமரிசனத்தை முன்வைத்துள்ளார் சத்ருகன் சின்ஹா.

அவர் கூறியிருப்பதாவது, "ஐயா, ஏன் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்? எல்லோரையும், எப்போதும் ஏமாற்ற முடியாது என்ற பழமொழி ஒன்று உண்டு. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றுவது சரியல்ல.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. நாங்கள் நீதி மற்றும் நீதிமன்றங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். என்ன நடக்கிறது என்று பொறுமையாக காத்திருந்து பார்ப்போம். தற்போதிருக்கும் சூழ்நிலையில் நீதி வெல்ல வேண்டும் என்று மட்டுமே சொல்ல முடியும்.

மேகாலயா, மணிப்பூர், கோவாவில் என்ன நடந்ததோ அதே தான் கர்நாடகாவிலும் நடக்க வேண்டும். கடவுள்தான் கர்நாடகாவையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டும். ஜெய் ஹிந்த்" என்று சின்ஹா கூறியுள்ளார்.

வட கிழக்கு மாநிலங்களில், தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து, தனிப் பெரும்பான்மை கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக ஆட்சி அமைத்து இருப்பதை சத்ருகன் சின்ஹா சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.