கால்பந்து, கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல.. தேர்தலுக்கும் லீவ் எடுப்போம்
கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல.. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் அலுவலகத்துக்கு லீவ் எடுத்துவிட்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.


கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல.. தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் அலுவலகத்துக்கு லீவ் எடுத்துவிட்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் பெங்களூர்வாசிகள்.
ஏராளமானோர் இன்று விடுமுறை எடுத்திருக்க, வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு இருக்கும் அனைவரும், அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் அமர்ந்து தேர்தல் முடிவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் காரணமே, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது அரிது என்ற தேர்தல் கணிப்புகளே.
செய் அல்லது செத்துமடி என்ற நிலை காங்கிரஸ் கட்சிக்கு. மிகப்பெரிய கௌரவப் பிரச்னையாக பாஜகவுக்கு இந்த தேர்தல் அமைந்துள்ளது. வாழ்வா? சாவா போராட்டம்தான் ஜனதா தளத்துக்கு. இந்த நிலையில், மூன்று கட்சித் தொண்டர்களுமே தீவிரமாக தேர்தல் பணியாற்றினர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முடிவுகளை அறிய ஏராளமான மென்பொறியாளர்கள் இன்று அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துள்ளனர். இது குறித்து சந்திரகாந்த் கூறுகையில் நானும் எனது நண்பர்களும் விடுமுறை எடுத்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்து தேர்தல் முடிவுகளை பார்க்கிறோம். கிரிக்கெட் மேட்ச் போல படிப்படியாக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வேண்டும். தொங்கு பேரவையே அமையும் என்று கணிப்புகள் வெளியாகின. எனவே எங்களுக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.
அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு தேர்தல் முடிவுகளை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே விடுமுறை எடுத்துவிட்டேன் என்கிறார் ஸ்ரீதர்.
பிரியம்வதா ஸ்ரீனிவாஸ் கூறுகையில், எனது கணவர் குடும்பத்தில் எல்லோருக்கும் அரசியலில் ஆர்வம். எல்லோருமே இன்று விடுமுறை எடுத்து வீட்டில் இருப்பார்கள். அதனால், நானும் வீட்டில் இருந்தே பணி செய்வதாக மாற்றிக் கொண்டு வீட்டில் இருக்கிறேன் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...