துமகுரு: நடக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் 111 வயது ஸ்ரீ ஷிவக்குமார சுவாமிஜி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுவாமிஜி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை ஒரு தேர்தலைக் கூட புறக்கணிக்காமல், ஒவ்வொரு முறையும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி விடுவார். இந்த தள்ளாத வயதிலும் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், தனது பூஜைகளை அதிகாலையிலேயே தொடங்கி விரைவாக முடித்துவிட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்க வந்து வரிசையில் நின்றுவிடுவார் சுவாமிஜி. ஆனால், இந்த தேர்தலில் முதல் முறையாக, வயோதிகம் காரணமாக அவ்வளவு விரைவாக வாக்குச்சாவடிக்கு வரமுடியவில்லை.
தனது சிஷ்யர்களுடன் 10.15 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். சுதந்திர இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கினை செலுத்தி, ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார்.
இது குறித்து அவரது மடத்தின் அதிகாரி கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் சுவாமிஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


