பெங்களூரு: தனது பேச்சுக்களின் மூலமாக பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மோடி தரம் தாழ்த்தி விட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது பேச்சுக்களின் மூலமாக பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மோடி தரம் தாழ்த்தி விட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் அமைந்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
இதற்கு முன் இருந்த எந்தப் பிரதமருமே மோடி அளவுக்கு தேர்தல் சமயத்தை இத்தகைய பேச்சுகளுக்காக பயன்படுத்தியதில்லை. அவர் தற்பொழுது தொடர்ச்சியாக செய்து வருவதைப் போன்று கர்நாடக மக்களை இரு அணிகளாகப் பிரிக்கும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவர் பேசும் விஷயங்கள், அதற்காக பயன்படுத்தும் மொழியை அவர் தவிர்க்க வேண்டும்.ஒரு பிரதமர் இப்படி தரம் தாழ்ந்து போவது என்பது நாட்டுக்கு நல்லதலல.
விவசாயிகள் பிரச்னை கையாளப்படும் விதமும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விவகாரங்கள் கையாளப்படும் விதமும் திருப்தியளிக்கவில்லை.
மோடி அரசின் தவறான பொருளாதார மேலாண்மை காரணமாக கடந்த 4 வருடங்களில் 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை நாம் உடனடியாக சரி செய்யா விட்டால் நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


