தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

லாலு பிரசாத்தின் ஆசையை நிறைவேற்ற மறுத்த ஜார்க்கண்ட் அரசு

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்.

News image
Updated On :29 மார்ச் 2018, 7:30 am


பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்.

இதற்காக, ராஞ்சியில் இருந்து ரயில் மூலம், நேற்று மாலை ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

ராஞ்சியில் இருந்து தில்லிக்கு விமானத்தில் செல்ல விரும்பிய லாலு பிரசாத் யாதவின் கோரிக்கையை ஜார்க்கண்ட் மாநில உள்துறை அமைச்சகம் நிராகரித்ததால், அவர் ரயில் மூலம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

69 வயதாகும் லாலு பிரசாத் யாதவ், 4 கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்று கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்ச் 17ம் தேதி இவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதற்காக, லாலு பிரசாத் நேற்று மாலை தனது உதவியாளர்களுடன் ராஜ்தானி விரைவு ரயிலில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.