ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்!
ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.


கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திஹார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றக் காவல் நாளை நிறைவடையும் நிலையில், இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிணைத்தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், வங்கிக் கணக்குகளை மூட தடை விதித்தும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...