தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஓலா செயலியில் தென் கொரியா செல்ல கார் புக் செய்து ஆச்சரியம் கொடுத்த பெங்களூரு இளைஞர்

ஓலா செல்போன் செயலியில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பெங்களூருவில் இருந்து தென்கொரியாவுக்கு செல்ல இளைஞர் ஒருவர் கார் புக் செய்திருப்பது செய்தியாகியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2018, 6:03 am


பெங்களூர்: ஓலா செல்போன் செயலியில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பெங்களூருவில் இருந்து தென்கொரியாவுக்கு செல்ல இளைஞர் ஒருவர் கார் புக் செய்திருப்பது செய்தியாகியுள்ளது.

ஓலா போன்ற செயலியின் அடிப்படையில் இயங்கும் கார் சேவையில், சில சமயங்களில் வெளிநாடுகளுக்கு கார் புக் செய்து டிவிட்டர் மற்றும் சமூக தளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த பிரஷாந்த் ஷாஹி என்ற மாணவர், பெங்களூருவில் இருந்து தென்கொரியாவுக்கு செல்ல காரை முன்பதிவு செய்துள்ளார். கோரிக்கை ஏற்கப்பட்டு கார் ஓட்டுநரின் செல்போன் எண், காரின் விவரம் அளிக்கப்பட்டதோடு, இந்த பயணத்துக்கு தோராய கட்டணமாக ரூ.1.4 லட்சம் கட்டணம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Story image


பெங்களூர் - தென்கொரியா இடையே 13,840 கி.மீ. தொலைவு கொண்ட இந்த பயணத்துக்கு 5 நாட்கள் ஆகும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அடங்கிய புகைப்படத்தை ஷாஹி டிவிட்டரில் பகிர அது வைரலாகிவிட்டது.

இதற்கு ஓலா தரப்பில், வெளிநாடுகளுக்குச் செல்ல பயணிகள் விமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரஷாந்த் கூறுகையில், கூகுள் ஆப்புக்குச் செல்வதற்கு பதில் ஓலா ஆப்புக்குச் சென்றேன். அங்கு தென் கொரியா என்று போட்டதும் வந்துவிட்டது. சரி விளையாட்டாக காரை முன்பதிவு செய்து பார்த்தேன். அதுவும் முன்பதிவாகி தகவலும் கிடைத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.