ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வீட்டுக்கு ஒருவர் இணைய வேண்டும்: நக்ஸல் அமைப்பு மிரட்டல்

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் கட்டாயம் இணைய வேண்டும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நக்ஸல்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

News image
Updated On :25 ஜூன் 2018, 12:13 pm

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் கட்டாயம் இணைய வேண்டும் என சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நக்ஸல்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாள்தோறும் நக்ஸல் அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள தாந்திவாடா எனும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் தங்களின் அமைப்பில் இணைய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு இணைய மறுத்தால் அந்த குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் பயமுடன் வாழ்ந்து வருவதாகவும், அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பதாகவும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த மிரட்டல் சம்பவத்தை அப்பகுதி காவல்துறை அதிகாரி ஆர்.எல்.தங்கி மறுத்துள்ளார். மேலும், நக்ஸல்கள் ஒழிக்கப்பட்டு வருவதாகக் கூறியவர், அதனாலேயே அப்பகுதி இளைஞர்களை நக்ஸல்கள் பயமுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.