எமர்ஜென்சியின் போது எழுப்பப்பட்ட 'இந்திராவே இந்தியா-இந்தியாவே இந்திரா' என்ற காங்கிரஸ் கட்சியின் சுயப்பிரகடனத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 25 (இன்றைய தினம்) இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தினம். இதனை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா அறிவித்தார். குடியரசுத் தலைவருக்கு அவர் அளித்த அழுத்தம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது எதிர்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
ஜூன் 25, 1975 தொடங்கி மார்ச் 21, 1977 வரை சுமார் 21 மாத காலகட்டத்துக்கு இந்தியாவில் எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. சுதந்திரத்துக்கு பின்பான இந்தியாவில் இது இருண்ட காலகட்டமாகவே இன்றளவும் அறியப்படுகிறது.
இந்த எமர்ஜென்சி காலகட்டத்தில் அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பருவா, 'இந்திராவே இந்தியா-இந்தியாவே இந்திரா' என்று சுயப்பிரகடனப்படுத்திக் கொண்டார். மேலும் இந்த காலகட்டத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக அனைத்தையும் அடக்கும் விதமாக ஒடுக்குமுறையை ஏவியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், இந்த எமர்ஜென்சியை விமர்சிக்கும் விதமாக இன்றைய தினத்தை பாஜக இந்தியாவின் கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறுகையில்,
இந்திராவின் இந்த சுயப்பிரகடனத்துக்கு காங்கிரஸ் கட்சி இன்றுவரை மன்னிப்பு கோரவில்லை. ஹிந்துத்துவத்தை அறிந்தவர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் இது பாரத நாடு.
‘ஹிட்லா்தான் ஜொ்மனி’ என்ற கோஷம், நாஜிக்கள் மாநாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோஷமே, ‘இந்திராதான் இந்தியா’ என்ற கோஷத்துக்கு உத்வேகமாக இருந்திருக்கக்கூடும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்

ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா கமேனி! எங்கே, எப்படி இருக்கிறார்?

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.23! 22 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


