தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மழை வேண்டி அமைச்சர் முன்னிலையில் தவளைகளுக்கு டும் டும் டும்!

வறட்சியை போக்கவும், விவசாயத்தை பெருக்கும் விதமாகவும் மழை வேண்டி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.

News image
Updated On :24 ஜூன் 2018, 11:42 am

வறட்சியைப் போக்கவும், விவசாயத்தை பெருக்கும் விதமாகவும் மழை வேண்டி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது.

இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த தவளைகள் திருமணத்தில் ஒன்றில் நிஜத் தவளைகளும், மற்றொன்றில் பிளாஸ்டிக் தவளைகளும் பயன்படுத்தப்பட்டன. இதில் ஒரு திருமணம் அந்த தொகுதி அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

Story image
Story image

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்ப்பூரில் மழை வேண்டி நடைபெற்ற தவளைத் திருமணத்தில் தான் அந்த தொகுதி அமைச்சர் லலிதா யாதவ் கலந்துகொண்டார். புண்டெல்காண்ட் பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இச்செயலைச் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Story image

அதுபோல உத்தரப் பிரதேசத்தில் நடந்த மற்றொரு நிகழ்வில் இரண்டு பிளாஸ்டிக் பொம்மைத் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவ்விரு நிகழ்விலும் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.