சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாள் பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சுமதி. திரிபுராவில் தன்சேரா பகுதியில் மூங்கில் சேகரிக்கும் பணியில் சுமதியின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார்.
அப்பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான பாதிப்பு இருந்தது. இதனை அறியாமல் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இத்தகைய பாதிப்பினூடே ரயில் வருவதைப் பார்த்த சுமதி உடனடியாக தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்த சைகை செய்தாள். நல்ல வேளையாக இதனைக் கவனித்த ரயில் ஓட்டுனர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். சிறுமி சுமதியின் புத்திசாலித்தனத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
சுமதியின் தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கவும், அவளது செயலை பாராட்டி, ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்யவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. பழங்குடியின சமூக நலத்துறை அமைச்சர் மேவார் குமார் ஜமாடியா சிறுமியின் தந்தையிடன் ரூ.50,000 வழங்கியுள்ளார். ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress

360 கோணத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன்; தலை வணங்குகிறேன்: முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர்

தமிழ்நாடு தேர்தல்! கிராமங்களை சமநிலை செய்த நகரங்கள்!

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


